சபாநாயகர் இலங்கை ஒலிபரப்பின் மீது கடும் குற்றச்சாட்டு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தன்னிச்சையாக செயற்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற நேரடி ஒலிபரப்புகளுக்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய நாடாளுமன்ற நேரடி ஒலிபரப்புகளை மேற்கொள்ளுமாறு 3 சந்தர்ப்பங்களில் அறிவித்த போதிலும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நடவடிக்கை மேற்கொள்ளவில்ல என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

#Karu Jayasuriya  #Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #SLR

No comments

Powered by Blogger.