மகிந்தவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

மகிந்த ராஜபக்ச உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தாக்கல் செய்த நீதிப் பேரணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜுன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடையுத்தரவு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச உட்பட 49 அமைச்சரவை உறுப்பினர்களையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Powered by Blogger.