மைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணியின் அரசியல் பயணம் எவ்வித தடையுமின்றி தொடரும் என, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.


மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் வைத்து இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாடு அராஜக நிலைக்கு செல்வதை தவிர்க்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.

நாம் பிரிவினைவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்த போது, ஒரு தரப்பினர் ஜனநாயகத்திற்காக போராடிக் கொண்டு வீதியில் இறங்கினர். இந்நிலையில், ஜனநாயகம் கிடைக்கும் வரை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நாளைய தினம் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும், ரவி கருணாநாயக்க நிதியமைச்சராகவும், சுமந்திரன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்கின்றனர். அதன்போது, இந்நாட்டு மக்களுக்கு ஜனநாயகம் கிட்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். அதன்மூலம் நாம் 85 வீத மக்கள் ஆணையை கொண்டிருக்கிறோம். இதனை அனைவரும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.