இலங்கை மீது அழுத்தம் கொடுக்கப்படும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை இன்னமும் தொடர்ந்து வருகின்ற நிலையில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்டுடன் சந்திப்பொன்றினை ஏற்பாடு செய்து கலந்துரையாடியுள்ளனர்.

இச் சந்திப்பின் போது தற்போது நிலவி வரும் அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் வலியுறுத்தியதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே இவ்விடயம் தொடர்பிலும் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின் போது மேலும் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இச்சந்திப்பின் தனது ட்டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் மார்க் பீல்ட்,
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலை தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அனைத்துக் கட்சிகளும் அரசியலமைப்பின்படி செயற்பட வேண்டும் என்பதையே மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தொடர்ச்சியாக அழுத்தம் வழங்குவோம் என்று தனது பதிவியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  #Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Mark-Field-MP #United Kingdom
Powered by Blogger.