மிக சிறப்பாக நல்லூரில் இடம்பெற்ற இலவச மருத்துவம்

நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகம் மற்றும் விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் விண்மீன்களின் ஒழுங்குபடுத்தலில்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பு வழங்கும் எலும்பு, நரம்பு மற்றும் தசை தொடர்பான பிரச்சனைகளிற்குரியதும் அனைத்து வயதினருக்குமான உடல் வலுவூட்டல் இலவச மருத்துவ முகாம் இன்று திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நல்லூர் பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தின் தலைவர் Rtr.v.கிருசாந்தி  கழக உறுப்பினர்கள்,  விரியும் சிறகுகள் அறக்கொடை நிறுவன உறுப்பினர்கள்  , விண்மீன்கள் குழுவினர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிசயம் அமைப்பு வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.இதில் றோட்டறக்ட் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் பயனடைந்தார்கள்
Powered by Blogger.