நேபாளத்தின் முதல் நவீன ரயில் பாதை!

இரண்டு ஆசிய நாடுகளான இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான அதிகார போட்டியின் பலனாக, தற்போது நேபாளத்திற்கு முதல் நவீன ரயில் தடம் அமையவுள்ளது.


பிஹாரில் ஜெய் நகர் - நேபாளத்தில் ஜனக்பூர் இடையே அமையவுள்ள புதிய நவீன ரயில் பாதை வியாபாரிகளுக்கும், யாத்ரிகர்களுக்கும் பெரும் பயனளிக்கும்.

தெற்காசியாவில் 65 நாடுகளின் பரந்த வட்டாரத்தில் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் நோக்குடன் சீனா போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல கோடிகளை செலவழித்து வருகிறது. இந்நிலையில், தெற்காசியாவில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவின் சமீபத்திய முயற்சியாக இந்த ரயில் பாதை உள்ளது.
80 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும் இந்த புதிய ரயில் பாதை செயல்பட துவங்கியதும், நேபாளம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும்.

இப்போது, ​​கிராமங்கள் வழியாக மட்டுமே ஜெய்நகர் மற்றும் ஜானக்பூரை இணைக்கும் பாதை உள்ளது. இது பெரும்பாலும் மோட்டார் சைக்கிள்களிலும் சிறு வண்டிகளிலும் தினசரி பொருட்களை கொண்டு செல்லும் மக்களுக்கு இப்புதிய ரயில் பாதை பெரும் பயனளிக்கும்.

#Bihar, #nepal #janakpur

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.