ஓட்டமாவடியில் பொலிஸார் சுட்டுக் கொலைக்கு எதிராக எதிர்ப்பு பேரணி!

மட்டக்களப்பு - வவுணதீவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு எதிராக ஓட்டமாவடியில் எதிர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றுள்ளது.


அண்மையில் வவுணதீவில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். இச் செயலை கண்டித்து ஓட்டமாவடியில் உள்ள அல்-கிம்மா சமூக சேவைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது.

இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் சாத்தியம் உள்ளது. மீண்டும் நாம் சந்தோசங்களை தொலைத்து அபாயம் சூழ்ந்து அச்சத்துடன் வாழும் நிலையை உருவாக்கும் வகையிலேயே இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Batticola #Oddamavadi
Powered by Blogger.