கிளிநொச்சியில்2018ஆம் ஆண்டிற்கான கலாசார விழா

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தின் கலாசார விழா 2018 சிறப்பாக இடம்பெற்றுள்ளது.வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள அனுசரனையுடன் கரைச்சி பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார பெருவிழா 2018 பிரதேச செயலாளர்
த.முகுந்தன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(04) காலை ஒன்பது முப்பது மணிக்கு இடம்பெற்றது.
 நிகழ்வில்  பண்பாட்டு அம்சங்களை வெளிப்படுத்துகின்ற வகையில்  கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.குறிப்பாக  நடனம், கர்நாடக இசை, கிராமிய இசை, கவியரங்கம், சமூக நாடகம் என்பன நிகழ்த்தப்பட்டன.
இதனைதொடர்ந்து  கரையெழில் ஏழு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலினை மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  வெளியிட்டு வைக்க   தொழிலதிபர் லு.சுலேகா பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், சிறப்பு விருந்தினராக மேலதிக அரச அதிபர்  சி.சத்தியசீலன், கௌர விருந்தினராக ந. கௌரதாசன் ஆகியோருடன் கலைஞர்கள் உத்தியோகத்தர்கள் பொது மக்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Kilinochchi



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.