முன்னாள் போராளிகளை குறிவைக்கும் சிங்கள தேசம்! நடப்பது என்ன?

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஒருவர் கிளிநொச்சி பொலிஸில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த நபர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் சற்று முன்னர் பொலிஸில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் கிளிநொச்சி – வட்டக்கச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் ஆவார்.இவர் முன்னாள் போராளி என அறியப்படுகிறது

இதேவேளை, மட்டக்களப்பு – வவுணத்தீவில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முன்னாள் போராளிகள் காரணமாக இருக்கலாம் என்று சிங்கள தேசம் கதைகளை பரப்பியிருந்தது.

பொலிஸ் திணைக்களத்தின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரி ஒருவரை சுட்டிக்காட்டி ஐலன்ட் ஆங்கில பத்திரிகையொன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தின் பின் அங்கு சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஆரம்ப கட்ட விசாரணைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அவர் ஜனாதிபதிக்கு சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம், முன்னாள் போராளிகள் விடுதலை என்பவற்றை மையப்படுத்தி, தமிழ் மக்களை மீண்டும் ஒரு கட்டுக்குள் வைக்கும் நோக்குடனும் முன்னாள் போராளிகளின் விடுதலையை தடை செய்யும் நோக்குடனும் இந்த கொலை சம்பவத்தை சிங்கள தேசம் திசை திருப்ப முயற்சிப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.