புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ஷவுக்கு பிராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையில் புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு தன்னை கோரி பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கேட்டுள்ளார்.கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில்ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், 5 ஆம் திகதி மீண்டும் சந்திக்கும்போது புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பதை விரும்புவதாக தெரிவித்ததாக கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் சுமந்திரன் கூறினார்.

இந்த சந்திப்பில் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் சிவமோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Powered by Blogger.