இந்தியை தேசிய மொழி என்பது தவறு: ராஜ் தாக்கரே

இந்தியை தேசிய மொழி என்று கூறுவது தவறு என நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்திருக்கிறார்.


இன்று மும்பையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராஜ்தாக்கரே, 'இந்தி மொழி அழகான மொழி தான். ஆனால் அதை தேசிய மொழி என்று கூறுவது தவறு. இந்தியைப் போலவே, தமிழ், மராத்தி, குஜராத்தி போன்ற பிற மொழிகளும் இந்த நாட்டின் மொழிகள் தான்.

மராட்டிய மாநிலத்தில் அம்மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது? உ.பி.,யில் நாளை ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டால் அம்மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பீகாரிலும் இதுதான் நடக்க வேண்டும்' என்று அவர் பேசினார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News #Hindi #national #language # RajThackeray

No comments

Powered by Blogger.