புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்!

நெருப்புக்கு மத்தியில் இருப்பது தாச்சி, அப்பம் அல்ல. நெருப்புக்கு முகம் கொடுப்பது தாச்சி தான், எங்களுக்கு பலம் இல்லையென்று யாரும் நினைக்க வேண்டாம். மக்கள் தான் எங்கள் பலம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சிறுபான்மை அரசை கொண்டிருந்த ஹிட்லர் அன்று உலகப் போர் முடியாவிட்டால் பொதுத் தேர்தல் தான் வேண்டும் என்றிருப்பார் . ஜனநாயகம் இங்கு மிளகாய்த் தூள் ஆனது. நாங்கள் சிக்ஸர் அடித்தோம்.

உயர்நீதிமன்றமும் சிக்ஸர் அடித்தது. இப்போது தேர்தலை கேட்கின்றனர். நாடாளுமன்றை கலைக்க வேண்டுமானால் ஒரு யோசனையை கொண்டு வந்திருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை.

அரசியலமைப்பை மீறி அரசியலமைப்பை பாதுகாக்க முடியாது. இப்போது இனவாதம் பேசுகின்றனர். நாட்டை பிரிப்பதாக இருபது வருடமாக கூறுகின்றனர்.

நாங்கள் நல்லிணக்கத்தையும் அரசியல் தீர்வையும் ஒற்றையாட்சியின் கீழ் தான் ஏற்படுத்துவோம். நீதிமன்ற சுயாதீனம் ஏற்படுத்தியதால் தான் இன்று எல்லோருக்கும் நீதிமன்றங்கள் மேல் நம்பிக்கை வந்தது. எங்கள் மீது குறை இருந்தால் சொல்லுங்கள்.

நாடாளுமன்ற தேர்தல் வந்தால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தாருங்கள். அப்போதே எங்களுக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க முடியும்.

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்தவுள்ளோம். எங்களது சட்டத்தரணிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஐ தே க செயற்குழுவில் அதற்கு அங்கீகாரத்தை பெறவுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo #Ranil Wickremesinghe

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.