சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி ஆட்சியமைக்க முடியாது

சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எந்ததொரு பெரும்பான்மை கட்சிகளினாலும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாதென பஃவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் கூறுகையில்,

“தற்போது பொதுத் தேர்தலினை விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நடத்தினாலும் கூட சிறுபான்மை கட்சிகளின் ஆதரவின்றி எந்ததொரு பெரும்பான்மை கட்சியினாலும் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சட்டம் மற்றும் சம்பிரதாயங்களை ஆராய்ந்து நீதிமன்றம் வழங்குகின்ற தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளித்து அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டு மக்களை கருத்திற்கொண்டு அதனடிப்படையில் செயற்பாடுகளை அனைத்து அரசியல்வாதிகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என ரோஹண ஹெட்டியாராச்சி வலியுறுத்தியுள்ளார்.
Powered by Blogger.