சம்மந்தன், சுமந்திரன் பேசாமல் இருக்க காரணம் என்ன?

நாட்டின் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது நாட்டு மக்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கப் போகும் தீர்ப்பை பற்றியே பேசி வருவதாகவும் நீதிமன்றத்தில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் இந்த காலப் பகுதியில்


ஸ்திரமான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சி தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக கூறுகிறது. அதற்கான பெயர் பட்டியலை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக கூறிய போதிலும் இதுவரை கையளிக்கப்படவில்லை.

உயர் நீதிமன்றம் டிசம்பர் 7ஆம் திகதி தேர்தலை நடத்துமாறு கூறினாலும் தேர்தலை நடத்த முடியாது என்று கூறினாலும் நாங்கள் ஸ்திரமான அரசாங்கமாக அடுத்த ஒன்றரை வருடங்கள் செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.

அத்துடன் எந்த தேர்தல் நடத்தப்படாவிட்டாலும் கடந்த அரசாங்கம் ஒத்திவைத்த மாகாண சபைத் தேர்தலை நாங்கள் நடத்துவோம்.

6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்துள்ளன. அடுத்த வருட ஆரம்பத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர் பார்த்துள்ளோம்.

ஐக்கிய தேசியக்கட்சிக்கு சாதகமற்ற தேர்தல் மாகாண சபைத் தேர்தல். அந்த கட்சியினால், இந்த 6 மாகாண சபைகளில் எந்த மாகாண சபையையும் கைப்பற்ற முடியாது.

இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியி மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்தது. அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை இழக்கும். அதேபோல், கிழக்கு மற்றும் வடக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்துள்ளது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது பற்றி எதனையும் நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை விட மாகாண சபை உறுப்பினர்களே மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.

வடக்கு மாகாணத்தில் கடந்த மூன்று மாதங்களாக தேர்தல் நடத்தப்படவில்லை. சுமந்திரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அது பற்றி பேசுவதில்லை.

தேர்தல் நடந்தால், தோற்போம் என்ற பயம் அவர்களுக்கும் உள்ளது. கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் மக்களுக்கு எந்த நன்மையை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.

சுமந்திரன் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பற்றி பேசுகிறார். ஆனால், வடக்கு மக்களின் உரிமைகள் பற்றி பேசுவதில்லை எனவும் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார். 

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Maithiri #Mahinda  #Sampanthan #Sumanthiran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.