வைகோ உட்பட 684 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி சட்ட விரோதமாக ஆளுனர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி பொலிசார் 684 பேர் மீதும் வழக்குத்தாக்குதல் செய்துள்ளனர்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

ம.தி.மு.க. சார்பில் கடந்த 3ஆம் திகதி கிண்டி ஆளுனர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட 684 பேர் மீதும் அனுமதியின்றி சட்ட விரோதமாக கூடுதல்,

தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் கிண்டி பொலிஸார் வழக்குத்தாக்குதல் செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.