19 ஆவது திருத்தத்தில் திருத்தத் தயார்-மைத்திரி

19 வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் அதை திருத்த தயார்  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன 2015 ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்கு தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளை எமது சமூகம் பெற்றுக்கொண்டுள்ளது.

அவை எமது நாட்டில் ஜனநாயகத்தை மதிக்கும் மக்கள் பெற்றுக்கொண்ட உண்மையான வெற்றியாக அமையும் அதேவேளை, தாய் நாட்டின் நவீன யுகத்தை நோக்கிய பயணத்திற்கும் இன்றியமையாததாகும்.

எனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின் இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களை பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல் ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  அர்ப்பணிப்புடன் இருக்கின்றார் என வலியுறுத்தப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo #Maithiri #Sirisena

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.