மகளை துஷ்பிரயோகம் செய்த கணவன்

இந்தியாவில் மனைவியுடன் கணவனுக்கு சண்டை ஏற்பட்ட நிலையில் அந்த ஆத்திரத்தில் பெற்ற பெண் குழந்தையை கணவன் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹரியானா மாநிலத்தின் குர்கானை சேர்ந்த நபருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் குடிபோதையில் நேற்று வீட்டுக்கு வந்த கணவன், மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து குழந்தையை அங்கேயே விட்டு மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் மனைவி மீதுள்ள ஆத்திரத்தில் பெற்ற குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

அடுத்தநாள் வீட்டுக்கு வந்த மனைவி குழந்தை சுயநினைவின்றி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்ந்தார்,

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் தலைமறைவாக இருந்த கணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.