தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மணமகன்!

திருமணம் நடைபெற இருந்த அந்த நேரத்தில், மணமகனின் கைப்பேசிக்கு வந்த புகைப்படத்தால் மணமகன் தனது கல்யாணத்தை நிறுத்தியுள்ள சம்பவமொன்று கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது.இந்தியா – கர்நாடகாவில் சக்லேஷ்பூர் என்ற இடத்தில் தாரேஷ் என்ற நபருக்கும் ஸ்ருதி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் தாரேஷ் ஸ்ருதி திருமணம் நடைபெற சில நிமிடங்களே இருந்த நேரத்தில் தாரேஷ் கைப்பேசிக்கு ஒரு புகைப்படம் வந்ததுள்ளது.

அதில் ஸ்ருதி ஒரு நபருடன் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாரேஷ் உடனடியாக கல்யாணத்தை நிறுத்தினார்.

பின்னர் தான் தெரிந்தது, இந்த வேலை அனைத்தையும் செய்தது ஸ்ருதியின் காதலன் அபிலேஷ் என்று.

இதையடுத்து அதே மணமேடையில் ஸ்ருதிக்கும் அவரின் காதலன் அபிலேஷுடன் திருமணம் நடைபெற்றது.

இதில் அனைவரும் புத்திசாலியாக நடந்துகொண்டனர். முட்டாளாக்கப்பட்டது தாரேஷும் அவரது வீட்டாரும் தான்.

No comments

Powered by Blogger.