கோலிவுட்டில் அறிமுகமாகும் சன்னி லியோன் சகோதரி!

வீரமாதேவி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் சன்னிலியோன் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள நிலையில் அதற்கு முன்பாக அவரது சகோதரி மியா ராய் லியோன் தமிழில் அறிமுகமாகவுள்ளார்.


2010க்கு பின் தமிழ்த் திரையுலகில் இளம் இயக்குநர்கள் புதிய கதைக்களங்களுடன் அறிமுகமாகி புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கினர். இயக்குநர்களைப் போல அப்போது கதாநாயகர்களாக அறிமுகமாகி வரவேற்பு பெற்றவர்கள் இன்று முன்னணி நாயகர்களின் பட்டியலில் இணைந்துள்ளனர். விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் இதில் அடங்குவர். இவர்களுக்கு முன்பாகவே பசங்க, களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் விமல். ஆனால் அடுத்தடுத்த படங்களில் அதை அவரால் தக்கவைக்க முடியவில்லை.

காமெடி கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதைகளே அவருக்கு ஓரளவு கைகொடுத்துவந்த நிலையில் பின் அதிலும் தேக்கம் ஏற்பட தற்போது அடல்ட் கண்டன்ட் வகைப்படங்கள் பக்கம் திரும்பியுள்ளார். தற்போது இவர் ஒப்பந்தமாகி நடித்துவரும் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு திரைப்படத்தின் ட்ரெய்லர் அதை உறுதிப்படுத்தியது. கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் சன்னி லியோனின் சகோதரி மியா ராய் லியோன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். இவர் ஐரோப்பிய பட உலகில் பல ஆபாசப் படங்களில் நடித்துள்ளார்.

ஆஷ்னா ஜவேரி கதாநாயகியாக நடிக்க பூர்ணா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், சிங்கம்புலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரித்துள்ளார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய நடராஜன் சங்கரன் இசையமைத்துள்ளார். படத்தை டிசம்பர் 7ஆம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.