தேர்தலை சாதி ரீதியாக அணுக முடியாது

தேர்தலை சாதி ரீதியாக அணுக முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

சென்னையில் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், பட்டியலின கட்சிகள் மற்றும் அமைப்புகள் தேர்தலில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றார்.

நம் பிரச்னைகளைப் பற்றி பேசுபவர்களை நாம் தேர்ந்தெடுப்போம். 234 தொகுதிகளிலும் உழைக்க வேண்டாம்; 7 நாடாளுமன்ற தனித் தொகுதிகளில் உழைப்போம். பட்டியலின அமைப்புகளுக்குள் கூட்டணியை உருவாக்குவோம். ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியலின அமைப்புகளைத் தேர்ந்தெடுப்போம் என்றும் ரஞ்சித் பேசினார்.

இதையடுத்து, அவரது பேச்சு விவாத பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது. இயக்குனர் ரஞ்சித்தின் யோசனையை ஏற்றால் தனிமைப்படுத்தப்படுவோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.