அடுத்த படம் குறித்து அறிவித்தார் பா.ரஞ்சித்

‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பா.ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய இரண்டு படங்களை அடுத்தடுத்து இயக்கியிருந்தார்.


இதன் காரணமாக பிரபல நடிகர்களின் பட்டியலில் இணைந்துள்ள இவர் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பா.ரஞ்சித் தற்போது பொலிவூட்டில் ‘பிர்சா முண்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராக வீரச்சமர் புரிந்த பழங்குடி மரபின் கதாநாயகன் “பிர்சா முண்டா”வின் வாழ்க்கை வரலாற்றை கூறும் படம் உருவாகிறது.

இதையடுத்து ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளிவரவுள்ளது. இந்த தகவலை ரஞ்சித் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.