யாழ் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் தெரிவில் முறைகேடு!

யாழ் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர் தெரிவில் அரசியல் தலையீடு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களால் குற்றம்
சாட்டப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் மற்றும் சுற்றுலா துறைக்கான உதவி விரிவுரையாளர்களுக்கான தெரிவு கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றது.இதில் இரண்டு துறைகளுக்கும் இருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டனர்.அதில் தொல்பொருள் துறைக்கு விண்ணப்பித்த மாணவி ஒருவருக்கு 3.6 புள்ளி கிடைத்த போதும், அவரை விட குறைந்த புள்ளி கிடைத்த மாணவனுக்கு விரிவுரையாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்டமை அரசியல் செல்வாக்கின் காரணமாகவே என பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்துளளார்.இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர்,பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கருத்துக் கூற மறுத்து விட்டார்.

No comments

Powered by Blogger.