வவுனியாவில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கரவண்டி காணாமல் மாயம்!

வவுனியா கோறவபொத்தான வீதியின் இலுப்பையடி பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த முச்சக்கரவண்டி காணாமல் போயுள்ளதாக அதன் உரிமையாளர் வவுனியா பொலிஸ்நிலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


இலுப்பையடிபகுதியில் உள்ள அவரது வர்த்தக நிலயைத்திற்கு முன்பாக முச்சக்கரவண்டியை நிறுத்தி விட்டு வர்த்தக நிலையத்தில் அவர் உறங்கியுள்ளார்.

காலையில் எழுந்து பார்த்த போது முச்சக்கரவண்டி மாயமாகியுள்ளது. அதன் அனுமதிபத்திரங்கள், திறப்பு போன்றன உரிமையாளரிடரிடமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.NP AAQ 4528 இலக்கமுடைய முச்சக்கரவண்டியே காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #Vavuniya #NP AAQ 4528
Powered by Blogger.