தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வு வேண்டும்!

தமிழ் மக்களின் பிரச்சனை அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது. எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று நாங்கள் உங்களுக்கு விரோதிகள் அல்ல  சம உரிமை என்ற விடயத்தை தெளிவுபடுத்த முடியாத முள்ளம் தண்டற்ற எங்களுடைய தமிழ் தலைவர்கள் இருப்பதுதான்
வேதனையானது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு  இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி முதியோர்களின் நலன் திட்டத்தில் கீழ்  மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் சிரேஷ;ட பிரையைகள் சபை முதியோருக்கு உலர் உணவு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது அதில் கலந்துகொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்
தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வு வேண்டும். எமது தலைவர்; செய்த ஆயுதபோராட்டம் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வந்து சொல்லியிருக்கின்றது. அதற்கான ஒரு சுமுகமான அரசியல் தீர்வை காணுகின்ற அடுத்த கட்ட அமைப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2010 ஆரம்பிக்கப்பட்டு அதற்கு ஊடாக் அங்கிகரிக்கப்பட்ட ஒரு இறையான்மையுடன் சுயநிர்ணய உரிமையுடனான  ஒரு தேசம் வேண்டும்.
அதற்காக  என நாங்கள்; யாருக்கும் சோரம் போகாது இன்றை வரைக்கும்; பல தடைகளுக்கு மத்தியில் பயணிக்கின்றோம். கொக்கட்டிச்சோலை படுகொலை தொடக்கம் பல படுகொலைகள் மற்றும்  தமிழ் மக்களுக்கு  நடந்த அநியாயங்களுக்காக இலவசமாக வழக்காடியவர் குமார்பொன்னம்பலம்
அவர் தனது இனத்துக்காக குரல் கொடுத்தற்காக 2001 ம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் படையால்  படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரின் மகன் அவரின் மகனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான   கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடகிழக்கிலே இடம்பெற்ற படுகொலைகளுக்காக ஜ.நாடுகள் வரைக்கும் சென்று குரல் கொடுத்து வருகின்றார்.
வடகிழக்கிலே எங்களுடைய செயற்பாடு மிக உக்கிரமாக இருக்கின்றது இந்த நிலையில் எங்களுக்க எதிராக பல சக்திகள் இறக்கப்பட்டுள்ளது அதையெல்லாம் தாண்டி பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கின்றோம்.
கிழக்கில் உங்களுக்கு நல்ல வேடங்களை பூண்டுகொண்டு வெளியாட்களுக்கு காணிகளை விலைபேசிக் கொடுக்கும் நிறைய தலைவர்கள் இங்கு  இருக்கின்றார்கள்
எதிர்காலத்தில் வருகின்ற எமது  சந்ததிகள் எல்லாத்திற்கும் நாங்கள் அடிமைகளாக நிற்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் இதற்கெல்லாம் காரணம் நீங்கள் நம்பி வாக்களித்த சில அரசியல் தலைவர்களின் செயற்பாடுதான்
இனிமேலும் எம்மக்களை ஏமாற்ற முடியாது எவ்வளவே படுகொலை நடந்திருக்கின்றது இதற்கெல்லாம் நீதிமன்றம் போகாத எங்களுடைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் ரணிலை காப்பற்ற நீதிமன்றத்திற்கு போகின்ற கேவலமான நிலைதான் தமிழர்களுக் இகிருக்கின்றது
அவர்கள் யார் வந்தாலும் சிங்களவர்கள் தான் அவர்கள் தமிழர்களை விரோதியாகத்தான் பார்ப்பார்கள். தமிழ் மக்கள் இலங்கை தீவிலே இருக்க கூடாது என்பது தான் அவர்களது எண்ணம்.
அதேவேளை எமது இனத்தை வேகமாக அழிக்கவேண்டும் என்பது தான் அவர்களது சிந்தனை. சிங்கள மக்களுக்கு இருக்கின்ற உரிமை தமிழ் மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்ற சிந்தனை இல்லை.
எனவே இப்படிப்பட்ட நிலமையில் தான் அப்பாவி தமிழர்களாகிய நாங்களும் சரி சிங்க மக்களும் சரி  இருக்கின்றார்கள்  உண்மையிலே அப்பாவி சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனை தெரியாது எனவே தென்பகுதிக்கு எங்களுடைய தமிழ் தலைவர்கள் சென்று அவ் விடங்களை தெளிவு படுத்தப்படவேண்டும் என்றார்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna  #suresh #Batticola

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.