கல்லறைகளையும் கற்துாண்களையும் இடித்தழிப்பது புத்தரின் பிள்ளைகளுக்கு இயல்பானது

” தமிழா் தாயகத்தின் நீா்த்தேக்கத்திட்டங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் வான்கதவினைத்  திறந்துவைத்த அரச தலைவா், கோலாகலமாக செல்பி எடுத்துக்கொண்டதோடு ஐக்கிய தேசியக் கட்சியினரின் சின்னம்
பொறிக்கப்பட்டு ரணில் விக்கிரமசிங்க அவா்களால் நாட்டப்பட்ட நினைவுக் கல்லை பெக்கோ இயந்திரத்தினால் கிளறி அப்புறப்படுத்திவிட்டு தனது பெயா் பொறித்த கல்லினை நாட்டித் திறந்துவைத்தார்” என்பது.

நாட்டில் தற்போதுள்ள அரசியல் நெருக்கடி ஒருபுறமிருக்க நாளாந்த வருமானத்திற்காக போராடும் மக்களின் நிலைக்கு தீா்வில்லாத நிலையில் அந்தப்பிரச்சினை  இன்னொரு புறமிருக்க அரச தலைவா் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து வான்கதவைத் திறந்து வைத்தமை யோசிக்க வேண்டிய ஒரு விடயமாகும்.

கல்லறைகளையும் கற்துாண்களையும் இடித்தழிப்பது  புத்தரின் பிள்ளைகளுக்கு இயல்பானதுதான் போலும். அன்று, மகிந்த ராஜபக்ச அவா்கள் உன்னதமான வீரா்களின் கல்லறைகளை இடித்தழித்திருந்தார். இன்று, அரச தலைவா் அவா்கள் நாட்டப்பட்டிருந்த நினைவுக்கல்லை அகற்றி தனது பெயரைப் பொறித்திருக்கிறார். அன்றைய சம்பவம் கொடுமையானது என்றால் இன்றைய சம்பவம் கோரமானது.

பழமையும் பாரியதுமான தமிழரின் நீா்க்காப்பகங்களில் ஒன்றானதே இரணைமடுக்குளம். இவ்விடத்தில் வைத்து அரசதலைவா் ஒரு விடயத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது  ”என்னுடைய அரசாங்கத்தில் என்னுடைய பிரதமராக உள்ள என் இனத்தவன் நாட்டிய கல்லையே அப்புறப்படுத்திய என்னால் எதை வேண்டுமானாலும் கிளறி எடுக்கவும் அப்புறப்படுத்தவும் முடியும் எனத்தெளிவாக எடுத்தியம்பியுள்ளார்.

மக்களே சொன்னாலும் கடவுளே வந்தாலும் ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக ஏற்கமாட்டேன் எனக்கூறியுள்ள ஜனாதிபதி அவா்கள் மக்களின் வாக்குகளினால்தான் இப்பதவியைப் பெற்றவா் என்பதை மறந்துள்ளார் என்பது தெளிவாகப் புரிகின்றது. நகரும் அரசியல் அரங்கத்தில் பல புதுமைகளைப் படைத்துள்ள இலங்கைத் திருநாடு, மிளகாய்துாள் போர் போன்ற  எந்த நாட்டிலும் நிகழாத சம்பவங்களைப்   பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி வடபகுதியில் குவிக்கப்படும் ராணுவத்தினரின் வருகையும் மக்கள் மத்தியில் கேள்விகளையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. 

காத்திருப்போம்------பார்த்திருப்போம்.

Powered by Blogger.