பண்டிகை காலத்தினை முன்னிட்டு கொழும்பின் பாதுகாப்பு!

பண்டிகை காலத்தினை முன்னிட்டு கொழும்பில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நிர்வாகத்திற்காக கொழும்பு நகரத்தில் மாத்திரம் 2000 பொலிஸ் அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இன்று(சனிக்கிழமை) முதல் விஷேட நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது சிவில் உடையணிந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விஷேட பொலிஸ் குழுக்கள் கொழும்பு நகர் முழுவதும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயற்படும் நபர்கள் சம்பந்தமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை மது போதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் சம்பந்தமாகவும் விஷேட நடவடிக்கை எடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.