பரீட்சை மோசடியில் ஈடுபட்டோர் மீது விசாரணைகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்போது பரீட்சை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் பலாங்கொடையில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை மீதான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


சப்ரகமுவ மாகாண கல்விப் பணிப்பாளரின் கண்காணிப்பின் கீழ் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த பரீட்சை மோசடி சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட சிலரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

ஒழுக்காற்று விசாரணைகள் முடிவடைந்த பின்னர் பரீட்சை மோசடியுடன் தொடர்புடைய ஆசிரியை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் ஆங்கில மொழிமூல பரீட்சைக்குத் தோற்றியிருநத தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் மூலம் பதில்களை அனுப்பியமைக்காக ஆசிரியை மற்றும் பரீட்சார்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Powered by Blogger.