மன்னாரில் சூடுபிடித்துள்ள பண்டிகைக்கால வியாபாரம்
மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து பண்டிகைக்கால வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
குறித்த பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் நத்தார், புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு வியாபாரங்கள் இடம்பெற்று வருகின்றன.
ஒவ்வொறு வருடமும் நத்தார்,புதுவருட பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு கேள்வி கோரலின் அடிப்படையில் இடம் வழங்கப்படும்.
அந்த வகையில் மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் சுமார் 300 இற்கும் அதிகமான தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்க இடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த இடங்களில் வர்த்தகர்கள் வியாபார நிலையங்களை அமைத்து பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பண்டிகைக்கால தற்காலிக வியாபார நிலையங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பண்டிகை காலத்திற்கு தேவையான பொருட்களை கொள்வணவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை