ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

ஜனாதிபதிக்கு விரும்பியவரை பிரதமராக்கியதால் தான் நாடு இன்று பிரதமர், அரசாங்கம் ஒன்று இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனால் ஜனநாயகத்தை மதித்து பாராளுமன்ற பெரும்பான்மையுடன் செயற்பட முடியாவிட்டால் ஜனாதிபதி தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்யவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொதடர்ந்து தெவிக்கையில்,
2001 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றபோது பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கே பெரும்பான்மை ஆதரவு இருந்தது. அதனால் அன்று ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா குமாரதுங்க தனக்கு விரும்பம் இல்லாவிட்டாலும் ரணில் விக்ரமசிங்கவை பிரதராக நியமித்தார்.

அதேபோன்று 2003 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றபோது சந்திரிக்கா குமாரதுங்க கதிர்காமரை பிரதமராக்க முற்பட்டபோது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையானவர்கள் பாராளுமன்றத்தில்  மஹிந்த ராஜபக்ஷ்வுடனே இருப்பதாக தெரிவித்ததால் சந்திரிக்கா குமாரதுங்க தனக்கு விருப்பமில்லாமலே அன்று மஹிந்த ராஜபக்ஷ்வை பிரதமராக நியமித்தார்.

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைத்து ஜனாதிபதிகளுக்கும் மாற்றமாகவே செயற்படுகின்றார். அதனால் பாராளுமன்ற ஜனநாயகத்தை மதித்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் செயற்ட முடியாவிட்டால் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பெரும்பான்மையுடன் இணைந்து செயற்படக்கூடிய ஒருவருக்கு இடமளிக்கவேண்டும். அத்துடன் ஜனாதிபதிக்கு விருப்பமானவரை பிரதமராக நியமித்ததால்தான் இன்று இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான் இல்லாததால் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.