தீர்வில்லையெனில் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

புகையிரத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான பிரச்சினைக்கு தகுந்த தீர்வு கிடைக்காவிடின் நாடு தழுவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை
மேற்கொள்வுள்ளதாக புகையிரத செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.ஜானகி ஹெட்டலில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி தற்போது இடம்பெறும் கா.பொ.த . சாதாரண பரீட்சை முடிவடைந்த பின்னர் வேலை நிறுத்தப்போராட்டத்தை நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(ஆர்.விதுஷா)

#colombo-train-station  #Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo

No comments

Powered by Blogger.