1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்: உயிரை காப்பாற்றிக் கொள்ள குதித்தவர் பலி!

கொடைக்கானல் மலைப்பகுதியில், 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காரிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள குதித்தவர் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரளா மாநிலம் திருச்சூர் அலமாஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர்கொடைக்கானல், திருச்சூர், பழனி, 7வது கொண்டை ஊசி, கார் விபத்து, Kodaikanal, Palani, Trichur, Car Accidentவிஷ்ணு (19). திருச்சூரில் உள்ள ஹோட்டலில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடன் ஜூபின் (20), சச்சின் (19), அப்துல் (21), ஆண்டனி (20), அனீஸ் (22), டிஷ்ணு (21) ஆகியோரும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், தான் புத்தாண்டை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஜூபின் கார் ஓட்டினார். அதிகாலை நேரத்தில் பழனிக்கு வந்த அவர்கள், கொடைக்கானல் மலைப்பகுதியிலுள்ள 7வது கொண்டை ஊசி வளைவில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 1000 அடி பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, அதிர்ச்சியடைந்த விஷ்ணு காரின் கதவை திறந்து வெளியில் குதித்துள்ளார். அப்போது, சிறிய மரத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில், அப்படியே உயிரிழந்தார்.

இதற்கிடையில், 1000 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் சிக்கியவர்களின் ஒரு சிலர் வெளியே வந்து, 3 ஆவது கொண்டை ஊசி வளைவுக்குள் வந்து, அப்பகுதி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி உதவி கோரினர். இதையடுத்து, பழனி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கயிறு மூலமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு வழியாக போராட்டத்திற்குப் பிறகு காருக்குள் சிக்கிய 4 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும், மரத்தில் சிக்கிய விஷ்ணு உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த 6 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.