நாடாளுமன்ற தேர்தலில் போட்டி; புத்தாண்டில் சபதம் எடுத்த பிரகாஷ் ராஜ்!

2019ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இதனை வரவேற்க உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. ஒருவருக்கொருவர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.


உலகத் தலைவர்களும், உள்ளூர் அரசியல் தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனுடன் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொகுதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாஜகவிற்கு எதிராக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக தலைவர்கள், பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.