தோனிதான் இந்தியாவின் லெஜண்ட்: புகழும் மேக்ஸ்வெல்


இந்தியாவின் லெஜண்ட் தோனி என்று ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வேல் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் சனிக்கிழமை அன்று தொடங்குகிறது.

இதில் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசினார்.

அதில் ‘‘தோனி இந்தியாவின் லெஜண்ட், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பியடிக்க முயற்சி செய்கிறேன். ஒரு ஆட்டத்தில் அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். பால்க்னெர் வீசிய அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்’’ என்று கூறினார். மேலும் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை கட்சிதமாக அடித்தும் காட்டினார்.

No comments

Powered by Blogger.