தியேட்டரில் திருமணம் செய்துகொண்ட ரஜினி ரசிகர்


சென்னை ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில், ரஜினி ரசிகர் ஒருவர் திருமணம் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ரஜினி, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள "பேட்ட" திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது. முன்னதாக இன்று அதிகாலை 4 மணிக்கு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கிலும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது, ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு திரையரங்க வளாகத்தில் திருமணம் செய்துக் கொண்டார். அன்பரசு -காமாட்சி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துடன், திருமண சீதனமும் அளித்தனர்.

No comments

Powered by Blogger.