புதிய அர­ச­மைப்பு உத்­தேச வரைவு நாளை வரு­கி­றது.


அத­னோடு  4 ஆவ­ணங்­க­ளை­யும் முன்­வைக்க வழி­ந­டத்­தல் குழு முடிவுபுதிய அர­ச­மைப்­புக்­கான உத்­தேச வரைவை – நிபு­ணர்­கு­ழு­வின் அறிக்­கையை நாளை வெள்­ளிக்­கி­ழமை, அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யா­கக் கூடும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிப்­ப­தற்கு வழி­ந­டத்­தல் குழு நேற்று முடிவு செய்­துள்­ளது. நிபு­ணர் குழு­வின் அறிக்­கை­யு­டன் மேலும் 4 அறிக்­கை­க­ளும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அறிக்­கை­கள் மீதான விவாதத்­துக்­கான திகதி, இந்த அமர்­வில் அல்­லது வழி­ந­டத்­தல் குழு­வின் அடுத்த கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.

வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் நாடா­ளு­மன்­றக் கட்­டி­டத் தொகு­தி­யில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் இடம்­பெற்­றது. இதன்­போது, நவம்­பர் மாதம் 7ஆம் திகதி அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யா­கக் கூட­வி­ருந்த நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்க திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஆவ­ணங்­களை நாளை வெள்­ளிக்­கி­ழமை சமர்­பிப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை 10.30 மணிக்கு நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்பு நிர்­ண­ய­ச­பை­யா­கக் கூட­வுள்­ளது. இதன்­போது, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, புதிய அர­ச­மைப்­புக்­கான உத்­தேச வரைவை – நிபு­ணர்­கு­ழு­வின் அறிக்­கை­யைச் சமர்­பிப்­பார்.

அத­னு­டன் இணைந்து நிபு­ணர் குழு­வின் கருத்­துக்­கள், அர­சி­யல் கட்­சி­க­ளின் கருத்­துக்­கள், இடைக்­கால அறிக்கை மீதான நாடா­ளு­மன்ற விவா­தத்­தில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்­க­ளின் தொகுப்­புக்­கள், மாகாண முத­ல­மைச்­சர்­கள் வழி­ந­டத்­தல் குழு­வுக்கு வழங்­கிய அறிக்­கை­கள் என்­ப­ன­வும் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன.

அறிக்­கை­கள் சமர்­பிக்­கப்­பட்ட பின்­னர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் எழுப்­பும் சந்­தே­கங்­க­ளுக்கு வழி­ந­டத்­தல் குழு­வின் உறுப்­பி­னர்­கள் பதி­ல­ளிக்­க­வுள்­ள­னர். சுமார் 2 மணி­நே­ரம், அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யாக நாடா­ளு­மன்­றம் அன்று செயற்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.