ஜே.வி.பி. சவாலுக்குள் அரசு சிக்கியுள்ளது!

அர­சி­யல் அமைப்பே தெரி­யாத அரச தலை வர் இனி­யும் அந்த அதி­கா­ரத்­தில் இருக்க வேண்­டுமா என்­பதை நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னிக்க வேண்­டும்.
இந்த அர­சுக்கு முது­கெ­லும்­புள்­ள­ தெ­னில் அர­சி­யல் அமைப்பை மீறி அர­சி­யல் சூழ்ச்­சி­யில் ஈடு­பட்ட அனை­வ­ரை­யும் தண்­டித்­துக் காட்­டட்­டும் என மக்­கள் விடு­தலை முன்­னணி நாடா­ளு­மன்­றில் நேற்று சவால் விடுத்­தது.

நாடா­ளு­மன்­றத்­தில் இர­சா­யான ஆயு­தங்­கள் சம­வாய திருத்த சட்­ட­மூ­லம் மீதான விவா­தத்­தின் போது உரை­யாற்­றிய ஜே.வி.பியின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நலிந்த ஜெய­திஸ்ஸ இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

‘அமெ­ரிக்க பாது­காப்பு படை­யி­னர் இலங்­கை­யில் நினைத்த நேரத்­தில் தமது இரா­ணுவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எந்த தடை­க­ளும் இன்றி அனு­மதி வழங்­கி­யது அப்­போ­தைய இலங்­கை­யின் பாது­காப்பு செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே. அமெ­ரிக்க பிர­ஜை­யான அவ­ரும் அப்­போ­தைய அமெ­ரிக்­க­வின் இலங்கை தூது­வர் ரொபேர்ட் ஒ பிளேக் இரு­வ­ரும் செய்­து­கொண்ட ‘ஹக்ஸா’ உடன்­ப­டிக்கை மூல­மா­கவே இதனை செய்­த­னர்.

அன்று மகிந்த ராஜ­பக்ச ஆட்­சி­யில் அமைச்­ச­ர­வை­யில் இருந்­த­வர்­கள் வாய் மூடிக் கொண்டு இருந்­து­விட்டு இப்­போது உடன்­ப­டிக்கை குறித்து வாய்­கி­ழி­யப் பேசு­கின்­ற­னர். தேசப்­பற்­றா­ளர்­கள் எனக் கூறிக்­கொள்­ளும் இவர்­கள் நேரத்துக்கு நேரம் மாறு­கின்­ற­னர். தேசப்­பற்­றா­ளர் என்­றால் எந்த நேர­மும் ஒரே கொள்­கை­யில் இருக்க வேண்­டும், காலத்­துக்கு காலம் மாறக்­கூ­டாது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் இருந்து வரும் இர­சா­யான ஆயு­தங்­கள் குறித்து பேசு­கின்­ற­னர் ஆனால் கடந்த நாற்­பது ஆண்­டு­க­ளாக இலங்­கை­யில் மிக­வும் மோச­மான இர­சா­யான ஆயு­தம் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. அது­தான் நிறை­வேற்று அதி­கா­ரம். கடந்த நாற்­பது ஆண்­டு­கா­ல­மாக இருந்­து­வ­ரும் நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு அரச தலை­வ­ராக்­கப்­பட்­டார். ஆனால் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு அவர் செய்­யும் நட­வ­டிக்­கை­கள் கடந்த காலங்­க­ளில் நாட்டு மக்­க­ளுக்கு நன்­றா­கவே தெரிந்­து­விட்­டன.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வ­தாகக் கூறிய போதி­லும் இப்­போ­தும் அவர் நிறை­வேற்று அதி­கா­ரத்தை வைத்­துக்­கொண்டு மீண்­டும் ஆட்­சியை கைப்­பற்­றவே முயற்­சித்து வரு­கின்­றார். அதற்­காக அவரை கொலை செய்­வ­தாக கூறிய அணி­யு­ட­னையே அவர் கூட்­ட­ணி­யை­யும் அமைத்­துக்­கொண்­டுள்­ளார். அவ­ரு­டன் இருக்­கும் சூழ்ச்சி கும்­பல்­தான் இவை அனைத்­துக்­குமே கார­ண­மா­கும்.

அர­ச­மைப்பு தெரி­யாத அரச தலை­வர் ஒரு­வரை தொடர்ந்­தும் அந்த அதி­கா­ரத்­தில் வைத்­து­கொள்ள வேண்­டுமா என்­பதை நாடா­ளு­மன்­றம் தீர்­மா­னிக்க வேண்­டும். அர­சி­யல் அமைப்பு மீறப்­பட்­டுள்­ளது என்­பதை உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­து­விட்­டது. ஆகவே அர­சி­யல் அமைப்­பினை மீறி அர­சி­யல் சூழ்ச்சி செய்த அனை­வ­ரை­யும் அரசு தண்­டிக்க வேண்­டும். முது­கெ­லும்­புள்ள அரசு என்­றால் முத­லில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்­டும் -– என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.