பேட்ட - விஸ்வாசம்: ரிலீஸுக்கு முந்தைய நிலவரம்!


இராமானுஜம் தமிழ் சினிமாவில் நாற்பது ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக, வசூல் சக்கர வர்த்தியாக ஆட்சி புரிந்த ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 150 கோடி ரூபாய் செலவில் குறுகிய கால தாயரிப்பாக நாளை
(ஜனவரி 9) வெளியாகிறது. சுமார் 100 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ள விஸ்வாசம் நாளை பேட்ட படத்தை எதிர்கொள்ளும் வகையில் ரிலீஸ் செய்யப்படுகிறது. திரையரங்குகள் எண்ணிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் இப்படம் முதல் இடத்தில் உள்ளது. தீபாவளியைக் காட்டிலும் பொங்கல் பண்டிகையொட்டி தியேட்டர் வசூல் குறைவாக இருக்கும். சுமர் 120 கோடி ரூபாய் வரை தியேட்டர் வசூல் இருக்கும். இதில் எந்தப் படம் அதிக வசூலை குவிக்கும் என்பது நாளை தெரிந்துவிடும். அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் குடும்ப சென்டிமென்ட் நிறைந்த இப்படத்தை குடும்பங்கள் கொண்டாடினால் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நிச்சயம் என்கிறது தியேட்டர் வட்டாரம். இளைஞர்கள் விரும்பும் நடிகராக அஜித் இருப்பதால் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட்டுகள் சுமார் 1000 ரூபாய் வரை சென்னையில் சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் இடத்திற்கு தகுந்தாற்போல் டிக்கெட் விலை வேறுபடுகிறது. முதல் நாள் விஸ்வாசம் சுமார் 15 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொகை அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இல்லை, அதிக விலைக்கு விற்கப்படும் கட்டணத்தில் ஆகும் மொத்த வசூல் இது என்கிறது தியேட்டர் வட்டாரம். கபாலி, காலா, 2.0 என மூன்று படங்களும் தமிழகத்தில் ரஜினிக்கு பெரும் வெற்றியைத் தராத படங்கள். எனவே விஸ்வரூப வெற்றி என்பது அவருக்கு தேவைப்படுகிறது. இன்றைய சினிமா பார்வையாளர்கள் விரும்புகிற நடிகர்கள் விஜய் சேதுபதி, சசிகுமார் ஆகியோரை துணைக்கு வைத்துக் கொண்டு நடித்திருக்கும் பேட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் குடும்பப் படமாக இருக்கும் என்கிறது விநியோகஸ்தர்கள் வட்டாரம். திரையரங்குகள் எண்ணிக்கை விஸ்வாசம் படத்தைக் காட்டிலும் குறைவு என்றாலும் படத்தின் மீது ஈர்ப்பையும், எதிர்பார்ப்பையும் பேட்ட படத்தின் டிரெய்லர், விளம்பரங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. விஸ்வாசம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு, டிக்கெட் விற்பனையின் வேகம் ஆகியவை பேட்ட படத்திற்கு இல்லை என்றாலும் குடும்பங்கள் தொடக்க நாளில் இருந்து இப்படத்தை பார்க்க கூடிய வாய்ப்பு உண்டு என்கின்றனர் அனுபவமிக்க தியேட்டர் உரிமையாளர்கள். விஸ்வாசம் படம் போன்று அதிகரிக்கப்பட்ட டிக்கெட் விலைப்படி இப்படம் முதல் நாளில் சுமார் 10 கோடி ரூபாய் வரை மொத்த வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும் படத்தின் பட்ஜெட்டுக்கு அதிகமாக லாபகரமாக படத்தை வியாபாரம் செய்துள்ளார்கள். விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் லாபம் சம்பாதிக்கும் வகையில் விஸ்வாசம், பேட்ட படங்கள் சாதிக்குமா? நாளை மாலை 7 மணி பதிப்பில் முதல் கட்ட தகவல்களுடன் சந்திக்கலாம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.