எச்சரிக்கை! தாயக மக்களுக்கு ஏற்படவுள்ள பேராபத்து!

இலங்கையில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான நோய் பலாங்கொடை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நோய் மனிதர்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை பேராசிரியர் அஷோக் தங்கொல்ல தெரிவித்துள்ளார்.

இவ்வாறான புதியவகை நோய் இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நோய் மனிதர்களுக்கு தொற்றும் எனவும், ஆபிரிக்க நாட்டு மக்களுக்கு தொற்றியுள்ளமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவ்வாறான நோய் தொற்றிய நாய் ஒன்று முதல் முறையாக பலாங்கொடை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நாய் , பேராதனை கால்நடை வைத்தியசாலையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, நோயின் தாக்கமும் அதன் ஆபத்தும்  கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் முல்லைத்தீவு பிரதேசத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நாய் ஒன்றிற்கும் Trypanasoma என்ற நோய் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோய் பரவ Testse Fly என்ற இளையான் வகை முக்கிய காரணியாகும். இதுவரையில் இலங்கையில் இந்த இளையான் பதிவாகவில்லை. எனினும் (Culex) என்ற நுளம்பு மற்றும் இரவில் மாத்திரம் வெளியே வரும் Kissing Bug என்ற நுளம்பினால் இந்த நோய் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறிள்ளார்.

உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருத்தல், கண் பார்வையில் குறைப்பாடு, கண்கள் வெள்ளையாகுதல் போன்ற அறிகுறிகள் நாய்க்கு காணப்பட்டால் அது இந்த நோயின் அறிகுறியாகும்.

இந்த நோய் பரவிய ஆபிரிக்க நாட்டவர்களுக்கு தோல் நோய் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இது நாயிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்களில் ஒன்றாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கை மக்கள் ஒருவருக்கும் இந்த நோய் பரவியுள்ளதாக பதிவாகவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நோயினால் ஏற்படவுள்ள ஆபத்தினைக் கருத்திற்கொண்டு மிகுந்த அவதானமாகச் செயற்பாடுமாறு நாட்டு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.