இறுதிக்கட்டத்தில் துல்கரின் அடுத்த படம்!


துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை
எட்டியுள்ளது. வாயை மூடிப் பேசவும், ஓ காதல் கண்மணி ஆகிய படங்கள் மூலம் தமிழில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார் துல்ஹர் சல்மான். அடுத்ததாக அவர் நடிப்பில் தமிழில் வெளியான சோலோ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. நடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துவந்த நிலையில் படத்தின் பணிகள் எப்போது முடிந்து ரிலீஸுக்குத் தயாராகும் என்ற கேள்வி எழுந்தது. இதில் அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் வலம்வந்த ரக்‌ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. தற்போது இதன் படத்தொகுப்பு, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், படக்குழு இன்னும் படப்பிடிப்பை நிறைவு செய்யவில்லை. ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பு நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.