பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம்


சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு பணி நேரம் நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகர காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று (ஜனவரி 9) உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். காவல் பணியோடு குடும்பத்தையும் கவனிக்க வேண்டியுள்ளதால் பெண் காவலர்களுக்குப் பணி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. “காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும்தான் பெண் போலீசாரின் பணி நேரம். அவசர காலம், விஜபி பாதுகாப்பு நாட்கள் தவிர மற்ற நாட்களில் இந்த பணி நேரம் செல்லும். காவலர்களுக்குப் பணிச்சுமையைக் குறைக்க வார விடுமுறை அளிக்க ஏற்கனவே ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு மட்டும் பொருந்தும். பெண் போலீசாரின் குடும்பப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார விடுமுறை, குறிப்பிட்ட பணி நேரம் இன்றி காவலர்கள் பணியாற்றுவதால், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.