உணர்வுக்குள் வாழ்கின்றது!

பார்வை ஒன்றினால்
பரவசம் செய்தாய்
போர்வைக்குள் தினம்
உன்முக தரிசனமே  .....


வியர்வைக்குள் தோய்ந்து
நினைவுக்குள் நீந்தி
உணர்வுக்குள் வாழ்கின்றது
இதயத்தில் மலர்ந்த  காதலும்   ....

இரவின் மடியினில்
நிலவு உறங்கும் வேளை
உந்தன் ஞாபகத்தின் ஒளியில்
எந்தன் பயணம் தொடர்கின்றது   !

நிவேதா நிவேதிகா
11 - 01 - 2019.

No comments

Powered by Blogger.