சிறப்பாக இடம்பெற்ற வ/ஒலுமடு தமிழ் மகாவித்தியாலய மரதன் ஓட்டபோட்டி!

வ/ ஒலுமடு தமிழ் மகாவித்தியாலயத்தின் 2019ம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல  விளையாட்டுப்போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்டபோட்டி இன்று வெள்ளிக்கிழமை காலை 6.50  மணியளவில் பாடசாலைக்கு முன் ஆரம்பமானது.


பாடசாலையின் அதிபர்
கு.விமலேந்திரன் தலைமையில் ஆரம்பமான போட்டியில் ஆண்கள் 11 KM தூரமும்,பெண்கள் 08KM தூரமும் என நிர்ணயிக்கப்பட்டு போட்டி  இடம்பெற்றது

போட்டியின் நிறைவில் ஆண்கள் பிரிவில்
த.தனுசன் முதலாம் இடத்தினையும்,த.சுமன் இரண்டாம் இடத்தினையும்,
க.கௌரிகாந்தன் மூன்றாம் இடத்தினையும் ,பெண்கள் பிரிவில் ர.டினோஜா முதலாம் இடத்தினையும்,ந.புகழினி இரண்டாம் இடத்தினையும்,
வி.டிசாந்தினி மூன்றாம் இடத்தினையும் பெற்றனர்

போட்டியின் நிறைவில் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களுக்கு வெற்றி கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள்,மாணவிகள்  கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.