திருச்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம்.!

திருச்சியில் தமிழர் பண்பாட்டை வளர்க்கும் விதமாக சமத்துவப் பொங்கல் கொண்டாட்டத்தில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டபட உள்ளனர். விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் நிலத்தில் அறுவடை செய்த புது நெல்லிலிருந்து
பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்தும், உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் வகையில் மாட்டுப்பொங்கல் வைத்தும், வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தியும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடாடுவார்கள்.


தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டினை உலகுக்கு உணர்த்தும் வகையில், தைத்திங்கள் முதல்நாள் தமிழர்திருநாள் என ஆண்டுதோறும் தமிழகத்தின் ஒவ்வொரு நகரிலும், ஊரிலும், பள்ளி, கல்லூரிகளிலும் மற்றும் குக்கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் தமிழ்புத்தாண்டும், பொங்கல் திருநாளும் எழுச்சியுடன் கொண்டாடப்படும்.

இத்தகைய பொங்கல் திருநாளை தமிழர் திருவிழாவாக மனிதநேயம் வளர்க்கும் விதமாக திருச்சி தனியார் கலைக்கல்லூhயில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று, கும்பியடித்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி கோலப் போட்டிகள் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo





கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.