வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள்!


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முன்பள்ளிச் சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் உலர் உணவுப் பொதிகள் இன்று வழங்கப்பட்டன.கிளிநொச்சி சட்டத்தரணிகள் சங்கத்தினரால் வழங்கப்பட்ட பொருள்கள் கண்டாவளை பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டன.100 மாணவர்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டன.கண்டாவளை உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பொருள்களை வழங்கி வைத்தனர்.
Powered by Blogger.