ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் போராட்டம்..!

திருகோணமலையில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜன் 13 ஆவது நினைவு நாளையொட்டி அவரது படுகொலைகளுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களும் மக்கள் செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து இன்று (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்கள் தொடர்பில் நீதி விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்களால் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஊடகவியலாளருடன் தெற்கைச் சேர்ந்த பல்வேறு ஊடகவியலாளர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

No comments

Powered by Blogger.