கேரளா கஞ்சா பொதிகளுடன் மூவர் கைது! வல்வையில் சம்பவம்!!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை கடற்கரையில் 110 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இன்று (சனிக்கிழமை) மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

யாழ். மாதகல் கடற்பரப்பில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு நூறு கிலோ கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு இரகசிய தகவலொன்று கிடைக்கப்பெற்றது.

இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட கடற்படையினர் கஞ்சா கடத்தப்படுவதைப் பின்தொடர்ந்ததுடன் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இறக்கப்படுவது தொடர்பாகவும் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து 110 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதுடன் இக்கஞ்சாவைக் கடத்திய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.


No comments

Powered by Blogger.