காரைநகரில் டெங்கு ஒழிப்பு

காரைநகரில்  (11.01.2019) வெள்ளிக்கிழமை  டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றது.


காரைநகர் ஜே-42, ஜே-48 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் காவல்துறையினர் ஆகியோர் இணைந்து வீடுகள், பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் பொது இடங்கள் என்பவற்றுக்கு நேரடியாகச்  சென்று சோதனைகளில் ஈடுபட்டனர்.

டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்கள் அவதானிக்கப்பட்டு  வீட்டு உரிமையாளர்கள் மூலம் உடனடியாகவே சுத்தம் செய்யப்பட்டது.

ஆட்களற்ற வெற்றுக் காணிகளுக்கு எச்சரிக்கை அறிவித்தல் ஒட்டப்பட்டது.

குடம்பிகள் உற்பத்தியாகக்கூடிய வகையில் கிணறுகள் மற்றும் கழிவுநீர்த் தொட்டிகளை வைத்திருந்த சிலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சிலருக்கு அவற்றைச் சுத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
Powered by Blogger.