ஆளுநர் சுரேன் ராகவன் டக்ளஸ் சந்திப்பு!

வடக்கு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஈபிடிபியின் செயலாளர் நாயகமம் டக்ளஸ் தேவானந்தா இருவரும் கலந்துரையாடினர்.


வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களுக்கும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்குமிடையே இன்று சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது
வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்கு மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடியதுடன்.
அவற்றுக்கு விரைவாகவும் அர்த்தமுள்ள வகையிலும் உரிய தீர்வுகளை காண்பது தொடர்பாகவும் பேசப்பட்டது.
மேலும் அந்த சந்திப்பின் போது வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் திட்டங்கள் ஊடாக துயரத்தில் வாழும் மக்களை விரைவாக மீட்பது தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினார்கள்

No comments

Powered by Blogger.