ஆலய வழிபாட்டை தடுத்த பௌத்த துறவிகள்!

முல்லைத்தீவு  பழைய செம்மலை நாயாற்றுப் பகுதியியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலத்தில்  இன்று பொங்கல் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் நடைபெறவுள்ளது.


இதன்போது நீராவியடி பிள்ளையார் ஆலயத்தினை ஆக்கிரமித்து பௌத்த விகாரையினை அமைத்துள்ள பௌத்த மதகுரு ஒருவர் , 40ற்கு மேற்பட்ட சிங்களவர்களும் தமிழ்மக்கள் மீது பிரச்சனையினை ஏற்படுத்தும் வகையில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட மக்கள் மீது தர்க்கம் எற்படுத்தியுள்ளார்கள்.

பௌத்த மதத்திற்குரிய இடம் என்றும் அதில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெற்கில் இருந்து வருகைதந்த பௌத்த துறவிகளும் பெரும் பான்மை சமூகம் சார்ந்தவர்களும் கருத்து முரண்பாடுகளை மேற்கொண்டு பிரச்சனையினை தோற்றுவிக்க முற்பட்ட வேளை பொலீசாரின் தலையீட்டினை தொடர்ந்து பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு செம்மலை கிராம மக்கள் பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர் .
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.