வா மகளே தை மகளே..!

தமிழ் மாதத் தலைமகளே !
தையாகப் பிறப்பவளே!
புகழ் பாடித் துதிக்கின்றோம்
புது மகளே நீ வாராய்..
நகல் பிரித்து அசல் காண
மனம் படைக்க முடிவெடுத்து
மகளே நீ வந்திங்கு
பாரெல்லாம் கருணை பொழி...!

பட்டாசு வெடி வெடித்து
பகலவனை வரவேற்று
பட்டாடை நாம் உடுத்தி
சிட்டாக மனம் மாற
பானையிலே பொங்கலிட்டு
நன்றிதனை நாம் சொல்லி
பார் முழுதும் கொண்டாட
வா மகளே தை மகளே..!
.. நிலா  கவிதாயினி..
புத்தளம்..
..நிலாவில் நின்ற நினைவுகள்..

No comments

Powered by Blogger.